நானோர் விசித்திரக் கவிஞன்

தலை கணம் கொண்ட
தீக்குச்சி அல்ல...
மகுடிக் கடங்கும்
பாம்பும் அல்ல...
பணத்திற் கலையும்
பேயும் அல்ல....
புகழுக் கலையும்
ஜென்மம் அல்ல...
மடிப் பிச்சை கேட்கும்
பழக்கம் இல்லை
மண்டி இடும்
அவசியம் இல்லை....
புகழ் பாடும்
ஜால்ரா அல்ல....
கூட்டணி சேர்க்கும்
அவலம் இல்லை...
கோஷ்டி மோதல்
தேவையும் இல்லை....
கவிதையில் பொய்யிருக்கும்
கவிஞன் நான் பொய்யனல்ல...!
முரண்பாடுகளின் மொத்த ்
உருவமும் இல்லை ....
தனக்காக எழுதும் கவிஞன்
பிறர் கருத்திற்கு ஏங்குகிறான்
பிறர்காக எழுதும் நான்
எவர் கருத்தை வேண்டி நிற்பேன்?
எனக்கு யாரும் போட்டி அல்ல
போட்டியில் நான் அங்கமும் அல்ல
நான் போடும் ராஜ பாட்டை
எவரும் பின் தொடர அல்ல....
எவரும் பின் தொடர்ந்து
என் பாத சுவட்டை அழித்து விடாதீர்
என் சுவடு தனித்திருக்கும்
அது என் கவிதை சுமந்திருக்கும்
கவிஞன் நானோர் விசித்திரக் கவிஞன்