ஒற்றைச் சிறகை விரித்து பறந்து வா
ஒற்றைச் சிறகை விரித்து பறந்து வா...
மகிழ்ச்சி சிறகை விரித்து வாழ்வில்
பறக்க ஆசை என்றால்
மறந்து நீயும் உறங்கிடாதே
கடின உழைப்பை தினமும் கொள்வாய்!!!
பிழைத்திடவும் உயர்ந்திடவும்
உலகில் வழிகள் உண்டு
முயற்சியோடு செயலும் என்றால்
வாழ்க்கை விளங்கும் சிறந்து!!!
கையிரண்டை இழந்தபோதும்
தன்னம்பிக்கை இழந்திடாதே
வாழ்வில் உயர நம்பிக்கை போதும்
தளர்ந்து நீயும் வீழ்ந்திடாதே!!
விழியிரண்டும் இழந்தபேர்கள்
உழைப்பும் உயர்வும் உணர்வாய்
பிழைத்து வாழும் எண்ணம் கொண்டால்
ஊனமது குறையுமில்லை அறிவாய்!!!
போட்டி பொறாமை பார்வை
கண்டிடும் உன் வளர்ச்சி
விட்டுத்தள்ளு அத்தனையும்
விதியுடைக்கும் பலர் சூழ்ச்சி!!!
உயர வானில் பறக்கும்போது
பொறாமை மிருகம் சிறகையொடிக்கும்
நீ விழுந்தவுடன் எழுந்துவிட்டால்
எந்த விதியும் துன்பம் முடிக்கும்!!!
ஒற்றை சிறகும் பறக்க வைக்கும்
உள்ளம் உறுதி கொண்டால்
எட்டத் தூக்கிப் போட்டுவிடு
தடுக்கும் இடரை எல்லாம்!!!