++++உனக்கு மட்டும் சொந்தமா++++
கவலையின்
முகம் புன்னகையை
மறைத்து
திரைமறைவில்
சிரிக்கிறது
சிகை அலங்காரம்
இல்லாமல்..............!
ஏட்டில்
இல்லாத படைப்பு
கவிதைகளை
பார்த்தது
எழுதுகோலை
நகைக்கிறதே..........!
எட்டிநின்று
வேடிக்கை பார்க்கும்
எழுத்து
எழுதுகோலை
சுமந்துவிடுமோ........!
கற்பனை
உனக்கு மட்டும்
சொந்தமா..........!
சிந்தனை
உனக்கு மட்டும்
பந்தமா.........!
சிற்ப்பிக்குள்
இருக்கும்
முத்து சிற்ப்பிக்குச்
சொந்தமா..........!
மலருக்குள்
இருக்கும்
தேனுக்கு
மலர்கள் சொந்தமா...!
உனக்கு
நீயும் சொந்தமல்ல
நானும்
சொந்தமல்ல... !
பின்பு எதற்கு
புதிய உறவுகள் - பின்பு
எதற்கு
புதிய
நினைவுகள்... !
மறந்திடு
பிறந்திடு நிலைத்திடு
விரைந்திடு.......!