சித்திரை திங்கள் கவிதைகள் 02

சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
அப்பாவுக்கு ஒரு கவிதை
--------------------------------------------
நித்தம்
நித்தம் வேலை செய்து
இயந்திரமாய் வாழும் உயிர் ..
சற்றும் ஒயாமல் சலிக்காமல் ..
குடும்பத்துக்கே தியாகம் செய்யும்..
ஆண்டவனுக்கு நிகரான தந்தையே ...!!!

செக்கு
என்ன சிவலிங்கம் என்ன ..?
தந்தையே உமக்கு ....
சித்தைரை திங்கள் என்ன ...?
தைத்திருநாள் என்ன ...?
எல்லாமே ஒன்றுதான் ....!!!

திருநாட்களை சந்தோசமாய்...
நாம் கொண்டாட எந்நாளும் ...
ஓயாமல் உழைத்த தந்தையே ..
உங்களிடம் கற்றேன் ஒரு பாடம் ...!!!
மணிக்கூடும் மனித வாழ்க்கையும்
ஒன்றுதான் இருக்கும் வரை ...
இருக்கும் வரை உழைத்து கொண்டே ..
இரு என்றாய் தந்தையே ...!!!

நீர் விட்டு சென்ற கடமைகளை
நான் தொடர்கிறேன் தந்தையே
உம் ஆசீர் வாதத்துடன் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (14-Apr-14, 9:46 am)
பார்வை : 78

மேலே