வாழ்த்துக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்...!!!
நண்பர்களே...!!
தோல்விஇல்லை துயரமில்லை
சோர்ந்துபோக தேவையில்லை..!
வெற்றி என்றும் தூரமில்லை
சோம்பல் விரட்டி வாழும்வரை..!
சென்றடையும் தூரமதில்
சேர்த்துவைக்க ஏதுமில்லை
என்றுணரும் நாளில்தானே..
உண்மை ஏற்று பழகிடுவாய்..
உன்னை அறிந்து வாழ்ந்திடுவாய்..!
உலகம் பார்க்க நீ உயர
துயரம் அதை எதிர்த்து நிற்க
வாழ்ந்த தினம் நினைவில் வரும்..
வாழ நல்ல வழியும் வரும்...!
துன்பம் வென்று இன்பம் சேர்க்க
வாழ்க்கை மாற்றம் பழகிபோகும்...
அன்புடனே தமிழ் பேசி
சரித்திரம் அதை நாம் படைப்போம் ..!!
தாய்மண்ணில் வாழ்ந்தபடி..
தமிழர் பண்பு தினம் வளர்ப்போம் ..!!
...கவிபாரதி...