தனிமை
கடற்கரையில் தனிமையில் உனக்காக காத்திருந்தேன்
உன் காலடி சுவடை நோக்கி
தொலைவில் உன்னை கண்டேன்
மனம் மகிழ்தேன்
உன் பதிலை எதிர் நோக்கினேன்
நீயும் வந்தாய்
என்னை கடந்து சென்றாய்
அந்த கடற்கரை அலைகள் உன் காலடி சுவடை அழைத்து சென்றது
நீயோ என் காதல் சுவடை அழித்து சென்றாய்