அன்புடன் உனக்காக.....................

என்னை காப்பற்றி
உன்னிடமே வைத்துக்கொள்

நேற்று நான்
விரும்பினேன் –நானும்
விரும்பப்பட்டேன்......

எனக்கும் கோபம் –ஆசை
சிரிப்பு வெறுப்பு
எல்லாம் –நேற்றுவரை .....

என் வரவிற்கு
பலர் காத்திருந்தனர்-அது
நேற்றுவரை......

அழகான மலர்ச்செடி-நீ
அழகாய் என்னை சுற்றி
மலர்ந்து மனம் வீசுகிறாய்....

அந்த வாசத்தை -நீ
கொடுத்தால் மட்டுமே அனுபவிக்க
என்னிடம் சுவாசம் இருக்கிறது
அதற்க்காய் நான் வருந்தவில்லை....

அமைதியான தூக்கம் –எனக்கு
இது பிடித்திருக்கின்றது
இந்த தூக்கம் கலையாமல்-நீ
காத்திடுவயா?

நான் உனக்காக –போரிட்டு
மடிந்த ஒரு போராளி
என் கனவுகளை கலையாமல்
காத்திடுவயா?

இது அன்பு,நட்பு,
பாசம்,வாழ்கை
எல்லாவற்றையும் விட பெரியது

உன் வருகைக்கு காத்திருக்கும்
லெனின்

எழுதியவர் : lennin (25-Feb-11, 4:18 pm)
சேர்த்தது : lennin
Tanglish : anbudan unakaaga
பார்வை : 382

மேலே