உனக்கு நான் சுமையாகுமோ

குடும்ப சுமை ஒவ்வொருவருக்கும்
வேலியில் படர்ந்திருக்கும்
சுரைக்கும் பாகலுக்கும் பரங்கிக்கும்
சுமையாமோ? சுமைஎன்றால்.......
என் மனதை உலுக்கும்
குடும்ப பாரங்கள் வேலியைப்போல்
அசையாமல் காய்ந்து வெடித்துச் சிதறி வெயிலிலும் மழையிலும் தாங்கு வதைப் போல ...
வாய் திறந்து அழ முடியாமல்
மெல்லவும் முடியாமல் கிள்ளவும் முடியாமல் வேலியை மெத்தையாக்கி
வேலியில் படர்ந்திருக்கும் பூக்கள்
சுகமாய் காய்க்கும் வரை
சுமை குறையலாம்
காய்த்த பின்
சுமை கூடலாம்
கனிந்ததும் மாறலாம் வேலியின் மனதைப் புரியாமலும் போகலாம் ....
காய்களின் கனங்களைப் பொறுத்து
பாரங்களின் சுமை கூடலாம்
குறையலாம் வேலியைப் போல
என்னின் சுமைகளும் .....