எல்லாம் மௌனமாய்

எல்லாம் மௌனமாய்.

எனக்கானதாய் இல்லை எனது நாட்களும்...
என் நாட் குறிப்பும்.

நீள்கிறது நினைவலைகள்...

நிராகரிக்கப் பட்ட எனது பாதைகள்
அழுக்குக் குவியலாய்...

அர்த்தம் இழந்த கனவுகள்...
வெறும் துண்டுப் பிரசுர வார்த்தைகளாய்.

முகமற்ற எனது உடல்...
அடையாளமிழந்து நொறுங்கிக் கிடக்கிறது...
இணங்கிப் போக முடியாத விருப்பங்களுடன்.

அலையாய்ப் படரும் தனிமை...
சாம்பல் திசையில் படர...

அழியாத வலியின் சாபம்
விபரீதமான தருணத்தின் விளிம்பில்
அமர்ந்தபடி...
கருவறை மணத்தை நுகர்கிறது.

என் எழுத்தை உறிஞ்சும் பேனா
செவிடாகிவிட....

இன்றைய இரவிலும்
எனக்காகவே காத்திருந்தது மரணம்.

எழுதியவர் : rameshalam (16-Apr-14, 8:03 pm)
Tanglish : ellam mounamaai
பார்வை : 98

மேலே