கடவுளை காப்பாற்றுங்கள்

முன்குறிப்பு :

இது கவிதையல்ல
கவிதையை போன்றது.
நான் கவிஞன் அல்ல
கவிஞனை போன்றவன்.
---------------------------------------------------------------------


பூமியின் அங்கங்களை
தன் கொடூர
அக்னி கதிர்களால்
சீண்டி பிளந்து
கொக்கரிக்கிறது
சித்திரை சூரியன்.

முரட்டு பகலவனின்
வன்கொடுமையினை
தடுத்திட இயலாத
முட்டாள் கவிஞன் நான்
அலறித்துடிக்க, என்னுடல்
வியர்வை அழுகையிட்டது.

வெப்பம் குளிர
வரம் கேட்டு
யாரிடம் போவது...?


கடவுளிடம்....?

எந்த கடவுளிடம்..?

எல்லாம் இருக்கட்டும்
முதலில் இங்கு
யார் கடவுள்?

”அடே...!
ஏதோ ஓரு கடவுள்..!
வரம் கேட்டு தொலையடா..! “

நானறிந்த பகுத்தறிவு
என்னை மிரட்டியது.

இந்த பகுத்தறிவுக்கு
புத்தியே இல்லை
என்று நொந்துக்கொண்டு
கடவுளை தேடினேன்....!
வேர்த்து விறுவிறுக்க
தேடி அலைந்து
விடை தெரியாமல்
முழி பிதுங்கி
சாலையோர மரநிழலில்
எனை சாந்தப்படுத்திக்கொண்டே...

”மரமே ! குளிர்காற்று வீசமாட்டாயா?
கொஞ்சம் அசைந்தால்தான் என்ன?
ரொம்ப திமிரா உனக்கு..? “

”போடா மரமண்டையா ”
எனை திட்டியது மரம்.

”ஏன் திட்டுகிறாய் மரமே..!”

”என் இனத்தை
இனப்படுகொலை செய்த உனக்கு
நிழல்கூட கொடுக்ககூடாது.
ஓடிப்போ... அற்பனே..”
கிளையொடித்து எனை
அடித்து துரத்தியது மரம்.

வலி பொறுக்காமல்
”கடவுளே....!
நீ எங்கே.............?”
உச்சியை நோக்கினேன்.
அறிவியல் உபகரணங்களில்
வெப்பமயமடைந்த காரணிகளால்
கிழிந்துப்போன
ஓசோன் திரையை
எல்லை தாண்டிய
ஆக்ரோஷ வெப்ப கதிர்கள்
அதிபயங்கரமாக எனை தாக்க
செத்து மடிந்து போனேன்..!


என்னுடலிருந்து வெளியேறிய
என் ஆன்மா பேசியது..!

“கடவுள் யார் தெரியுமா?”

”இயற்கை”


மனிதர்களே..!
உங்களை காப்பாற்றிக்கொள்ள
முதலில்
கடவுளை காப்பாற்றுங்கள் ..!


----இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (16-Apr-14, 9:01 pm)
பார்வை : 227

சிறந்த கவிதைகள்

மேலே