+++கடந்து வந்த நினைவுகள்+++

புதிய சைக்கிள்
பள்ளிக்குச் சென்ற கடந்த
நாள் முதல் வகுப்பு
தமிழ் பாடம்........!

அப்பாவிடம்
தெரியாமல் எடுத்து சென்ற
பணம் நட்புடன்
திரைப்படம்
கரகாட்டக்காரன்...............!

தெருவோரம்
அஞ்சல் பெட்டி
தினமும் சேகரித்த காகிதம்
அப்பாவின்
பென்சன் பணம்..............!

வண்டி மாடு
சுற்றி வந்த நம் ஊர்
திருவிழா
புது சட்டை
புது கைகெடிகாரம்............!

ஊர் ஓரத்தில்
ஆலமரம் சடுகுடு
விளையாட்டு
ஆனந்தம்
பொங்கிடும் தனை மறந்து
விளையாடிடும்
அருகே என் தோழர்கள்............!

பெட்டி கடை
புளிப்பு மிட்டாய் வாங்கித்தந்த
அண்ணன் என்
அருகில்
அன்பு சகோதரர்கள்..................!

எழுதியவர் : லெத்தீப் (17-Apr-14, 10:51 am)
பார்வை : 92

மேலே