காத்திருந்தேன்

வரம் பெற்றவள்
நானென்றே எண்ணியிருந்தேன்,
நம் பெயர் சேர்தெழுதும்
நாளுக்காய் ஏங்கியிருந்தேன்.

புல்லின் மடியிலே
படுத்துறங்கும் பனித்துளியாய்,
உன் நினைவின் நிழலிலே
உயிர்த்தெழுந்தேன்.

காதலின் வடிவிலே
என்னுள் திறப்பது,
கல்லறைக்கு வழியென்று
அறியாமலே..........
நானும் காத்திருந்தேன்!!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (17-Apr-14, 7:22 pm)
Tanglish : kathirunthen
பார்வை : 423

மேலே