விதைவைப்போம் விதவைக்கு
![](https://eluthu.com/images/loading.gif)
விதைவைப்போம் விதவைக்கு
ஒரு அபலையின் அழுகை
கடலில் மீனின் கண்ணீராய்
மறப்பதிங்கு கடினம்தான்
மறுப்பதற்கில்லை மனமோ
தூண்டிலிலும் சிக்கவில்லை
வலையிலும் மாட்டவில்லை
உயிர் துடியாய் துடிக்கிறது
துயிலுரியும் பார்வையாலே
வாழ்க்கையிங்கு வாழ்வதற்கே
வசந்தமுன்னில் வரவேண்டும்
ஆண்களுக்கு மட்டுமென்ன
பெண்ணே உனக்கும்தானே
உணர்வுகளுண்டு ஊரார்
பேசுமென்று நீ ஊமையாய்
இருக்காதே தியாகமென்று
சொல்லி தீயிலிட்டு எரிக்காதே
உடன் கட்டை ஏறுவதிலும்
உயிரோடிருப்பது கொடிதன்றோ
வேண்டாம் இனியுமிந்த அவலம்
வேண்டும் உனக்குமொரு வாழ்வு
வெந்து வெந்து சாவதுதனால்
சாதிப்பதிங்கு எதுவுமில்லை
வேடிக்கை பார்ப்பவர்களை
நம் வெற்றி கண்டு வியந்திட
புதியதொரு பாதை நோக்கி
புறப்படுவோம் இப்போது ,,,,,,
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....