ஆனந்தசுரபியா நீ

உன்னை பார்க்கும் போது
என் இதயம் உருகுகிறதே
என் இதயம் என்ன
பனிக்கட்டியால் செய்யப்பட்டதா ?

யாரும் சொல்லாமலேயே
உன் பெயர்
என் காதில் கேட்கிறதே
என் காது என்ன
இல்லாத ஒலிகளை கேட்குமா ?

என் உள்ளங் கைகளை
பார்க்கும் போது
உன் உருவம் தெரிகிறதே
என் உள்ளங்கை என்ன
புகைப்படக் கருவியா ?

உன்னை நினைக்கும்போது
என் உடல்
கடலில் நீந்துகிறதே
என் உடல் என்ன படகா ?

உன்னை உணரும்போது
என் மனதில்
ஆனந்தம் உண்டாகிறதே
நீ என்ன
அமுதம் அள்ளித் தரும்
அமுதசுரபி போல்
ஆனந்தத்தை அள்ளித் தரும்
ஆனந்த சுரபியா ?

எழுதியவர் : ஜான் பிராங்க்ளின் (19-Apr-14, 12:26 pm)
பார்வை : 135

மேலே