32-தந்திர காட்டில் நான் 4-உள்முக தரிசனம்-கார்த்திக்

32-தந்திர காட்டில் நான் 4-உள்முக தரிசனம்-கார்த்திக்

தத்துவதரிசனம் (26)

நீ வந்தவுடன் கொடுக்கப்பட்ட
அடையாளம் ,இன்னும் உன்னோடு
இருக்கிறதா -அன்பே,அதனை
அழிக்கும் தைரியம் உன்னிடம்
தோன்றினாலே நீ பாக்கியசாலிதான் !!!

தத்துவதரிசனம் (27)

படைப்புகென்று விதி இருக்கிறது
அந்த விதிப்படிதான் உலகமே
இயங்குகிறது ,இப்படி யார் கூறினாலும்
நம்பிவிடாதே; விதிகளுக்கு அப்பாற்பட்டது
படைப்பு -அது எப்போது நிகழும்
எப்படி நிகழும் , எங்கே நிகழும் என்பது
காலத்தால் கணிக்கப்படாத ஒன்று
காரணம் காலமே படைப்பின் ஒரு
அங்கம்தானே !!!

தத்துவதரிசனம் (28)

இவ்வளவு நீண்ட வாழ்வு இயல்பாக
மலர்ந்தது ,இன்பம் மட்டுமே அதனின்
வாகனம் -அப்படியிருக்க துக்கத்தால்
நீ எதை அடைந்துவிட முடியும் ?
ஆனந்தம் மட்டுமே மலர்ந்து -உதிரும்
வரை உன்னோடு இருக்கும் மாபெரும்
சொத்து அதற்கு அழிவே இல்லையாயினும்
அது உனது துக்கம் படிந்த எண்ணங்களால்
மறைந்து - புதைந்துள்ளது !!!

************(தத்துவதரிசனம் தொடரும் )***********

என்றென்றும் அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (20-Apr-14, 2:02 pm)
பார்வை : 102

மேலே