ஆய்வகத்தில் ஒரு நாள்-வித்யா
நான்கு மூக்கு கண்ணாடிகள்
ஒன்றன் மேல் ஒன்றாக
அணிந்து........
எலெக்ட்ரானிக் வானரங்களின்
DNA க்களை முப்பரிமாணங்களில்
ஆராய்ந்து கொண்டிருந்தேன்............!
குளோனிங் என
resister உருவங்களை
நினைத்துக்கொண்டிருக்கும் போதே ........
கலர் கோடிங் தெரியாதா...?
என குட்டு வாங்கினேன்........!
கருப்பு, சிவப்பு
பச்சை,நீலமென
மேசை மீது வைத்திருந்த
wire களெல்லாம் வெட்கப்பட்டு
நின்றிருக்க....... அதை முறைத்தவாரே
வால் முளைத்த transisterodu
இணைத்து விட்டேன்.........!
செல்லமாக கோபித்து
கொண்ட capacitor -ஐ
யாரோடு இணைப்பது என
விழி பிதுங்கி நான் நிற்க.......
கரு கருவென
கால்கள் பல கொண்ட
IC கண்ணை உறுத்தியது..........
வானரங்களை எல்லாம்
கண்ணா பின்னாவென்று
அறிமுக இணைப்பு கொடுத்து
ஒருவழியாக
சொந்தமாக்கி விட்டேன்......
உள்ளீடென வைக்கோலை
கொடுத்தேனா தெரியவில்லை........
பாலிற்காக காத்துக்கொண்டிருந்தேன்.......!
CRO திரையில்
sine அலைகளும்
cosine அலைகளும்
தலை விரிகோலத்தில்
ரம்பை ஊர்வசி என.......
எனை பார்த்து
பல்லிளிக்க..............
எனை நானே
நொந்துகொண்டேன்.......!
மீண்டும் ஒருமுறை
நான் படை எடுக்க
ஆயத்தமானபோது........
சகித்துக்கொள்ளத வானரங்கள்
சூடேற ஆரம்பித்தன.......!
நான் கெஞ்சி
கேட்பதற்குள்.......
காடே பற்றி எரிய
ஆரம்பித்தது..........!
(breadboard வெடித்தது )
ஆயிரம் ரூபாய்
அபராதம் கட்டி
நான் வெளியேறிய என்
"ஆய்வக சோதனை"
அது.............!
****************************************************************************
குட்டு வாங்கிய கல்லூரி நாட்கள்............!