கறைக்கொண்ட உற்சாகம்
![](https://eluthu.com/images/loading.gif)
கள்ளம் புகுந்த என் மனதை
சோதனைச் சாவடியில் சோதிக்க நினைக்கிறன்
கறைபடிந்த நிலவை வெண்ணிலவு என்று சொல்லவது ஏன் ?
கறைக்கொண்ட என் மனதும் உற்சாகத்தில் குதிப்பது ஏன்??
கேள்விகள் மட்டும் எழ
பதில் அறியாமல் திக்குமுக்குகாடுகிறேன்
சபிக்கப்பட்ட எகிப்தின் சிலை என் மனமானதோ
அதை படிக்க மறுக்கிறேன்
சிறிது எட்டி பார்தேன் மனக் கேணிக்குள்
உன் நினைவுக்குவியல் ஒன்றை கண்டேன்
நுழைவனுமதிச் சீட்டு நீ பெறவில்லை
வேண்டுகோள் விடுக்கவில்லை
உண்மை சொல்
சுரங்கம் அமைத்து உள்நுழைந்தாயா
மனது படுத்தும்பாட்டில் களங்கி போய்கிறது என் நிலைமை
புதர்க்குழி என்று தெரிந்தும் விழுந்துவிட்டேன்
உன் மனக்குழியில்