விரகம்

பாலாய் ஒளியைப் பொழியும் நிலவே
எனக்காக தனியே
வேதனையைப் பொழிகிறாயா ?
மெழுகாய் உருகி வழிகிறேன் நான்
வசமாய் மாட்டிக் கொண்டேன்
வாதை தாங்கவில்லை
வேய்குழல் ஊதுகிறாய்
வெந்து நானும் உளம் அழிகிறேன்

அய்யோ
ஒரு சந்தேனும் கிடைக்காதோ தப்பிக்க
பித்தாய் ஆவேனோ
பிதற்றித் திரிவேனோ
கொல்லாதே விட்டுவிடு.

வானம்பாடியாய் சிறகடித்தே
பறந்திருந்தேன் அன்று
விகாரம் தந்து
வானரமாய் ஆக்கி விட்டாய் இன்று.
கபடமின்றிக் களித்திருந்தேன்
நீயோ சிதைத்துவிட்டாய்
அம்பால் துளைத்து விட்டாய்

நோய் தந்தாய்
நொந்துபோனேன்
மருந்தும் நீதானே
தருவாயென்றால்
தவமும் செய்வேன்
தரணியே ஓயும் வரை.
தவிர்த்திடாதே என்னை!

எழுதியவர் : நேத்ரா (21-Apr-14, 7:03 am)
சேர்த்தது : Nethra
பார்வை : 74

மேலே