வானம் ஒரு கவிதை
நீல வண்ண திரையில்
நித்தம் ஒரு நாடகம்...
மொத்த உலகம் அத்தனைக்கும்
நீதானே ஊடகம் ...
அழுகிறாய் ... பசி அணைக்கிறாய்
பூமியில் புழுவுக்கும்
தாயாய் ஆகிறாய்...
மழைக்கவிதை வடிக்கிறாய் ...
அதில் பூமிக்கு
பச்சை வர்ணம் அடிக்கிறாய்....
சுடர் விட்டெரியும் ஒரு
ஓளி கொண்டே பூமியெங்கும்
பூக்கள் செய்கிறாய்...
நீ மருமகனா? இல்லை
மணமகளா?...
கோபம் வந்தால் சுடுகிறாய்...
குளிர்ந்தால் அழுகிறாய்...
நிறங்களின் நிஜத்திற்கெல்லாம்
நீதானே மூலத்தாய்..
மரங்களின் இனத்திற்கெல்லாம்
நீதானே செவிலித்தாய்...
பாரிஜாதம் முதல்
பன்னீர் பூக்கள் வரை
உன் விரல் பட்டால்
உயிர் வரும்
அதில் படுத்துறங்கும்
கண்நீர்த்துளியும்,
நீ வரும்போதே உயிர் விடும் ...
கவிதையே! உனை வரவேற்பேன் ...
கற்பனைகளால் உனை நான் தூவுவேன் ..
உன் இளஞ்சூட்டை கொஞ்சம் நானெடுத்து
என் கவிகலந்து உனை தூங்கவைப்பேன் ...
கவிதைகளோடு க நிலவன்