சாராயம் சாராத சார்யார்

திருவாய் மொத்தமும்
மதுவாய் நிறைந்தது
வருவாய் மொத்தமும்
மெதுவாய்க் கரைந்தது

விதிவிலக்காய் வீதியில்
மதுவழக்கு நடந்தது
வீதிவிளக்கு பாதியில்
மின்னிழக்க அணைந்தது

கும்மிருட்டுப் போர்வையில்
பணத்திருட்டு நடந்தது
குடிகாரன் பார்வையில்
கடிகாரம் தொலைந்தது

மதுவிலக்குக் கோரியே
மணவிலக்கு நேர்ந்தது
குலவிளக்குக் காரியே
தலைமுழுகிச் சோர்ந்தது

குடிபோதை தெளிந்ததும்
நடைபாதை தெரிந்தது
குடிப்போரை தவிர்ந்ததும்
உபாதை நீங்கியது

சாராயம் சாராத
சாராராய் மாறிடுவோர்
ஆராயும் பேராக
சீராகத் தேறிடுவர்

எழுதியவர் : ரூஹுல் ரஸ்மி (22-Apr-14, 11:20 am)
பார்வை : 165

மேலே