பிச்சைத்தட்டுக்கள்-வித்யா
வானமே வீடாக
நடைபாதைகளே படுக்கையாக
கிழிந்த அங்கவஸ்த்திரங்களும்
அழுகிப்போன வாழ்க்கையும்
திறந்த வெளியிலும்
சுதந்திரம் பறிக்கப்பட்டவனின்
அங்கீகாரங்களிவை................!
நாசிகளை துளைக்கும்
தூசிகளினூடே
பசியைத்தின்று
கதறும் வயிறுகளின்
பொருமலோசைகள்............!
வறுமை ராஜாக்களின்
அவைத்தலைவர்கள்.......
கிறுக்கல்கள் புதைந்த
வெற்றுகாகிதங்கள்............
ஆயிரம் பொற்காசுகளின்
சில்லரைச் சிதறல்கள்
இவர்கள்....பிச்சைக்காரர்கள்.......!
வாழ்க்கையின் விரல்கள்
கைகளைத்தேடிக்கொண்டிருக்க
தேர்ந்தெடுக்காமலே வந்து
ஒட்டிக்கொண்ட சுயேச்சை பதவி
பிச்சைக்காரன்............!
விழிகள் வைத்துக்கொண்டு
பார்வைகள் யாசிக்கும்
இவர்தல் காதல் யாசகர்கள்...........!
சீண்டாத பார்வைகளினூடே
விழிகளை யாசிக்கும்
இவர்கள் பிச்சைக்காரர்கள் ......!
காலணியணிந்த அம்மனப்பாதங்களின்
அரைகாத தூர பயணம்.......
அரசியல் யாசகர்கள்........!
பொய்க்கால் குதிரையிலோடும்
வாழ்க்கை பயணம்...........
இவர்கள் பிச்சைக்காரர்கள்.......!
இலவச ஆடைவிளகல்களில்
கட்டணம் செலுத்தும்
கண்கள்........காம யாசகர்கள்.....!
ஆடைகள் தேடும்
இலவச மார்பகங்கள்......
இவர்கள் பிச்சைக்காரிகள்..........!
சட்டைப்பைக்குள் கைவிட்ட
பிச்சைக்கார விரல்கள்
அதன் ஓட்டை வழியே
அட்சய பாத்திரத்தில்
pizzaa தேர்ந்தெடுத்தது........!
புறக்கணிக்கப்பட்ட
பிச்சை பாத்திரங்கள்
கருணைக் கண்களை
சில்லரை விலையில் தேடுகின்றன.......!
யாசித்தல் ஒன்றே........
என்ன ஒரு "வித்யா"சம்
அவர்கள் பணக்கார பிச்சைக்காரர்கள்
இவர்கள் பிச்சைக்கார பணக்காரர்கள்............!
****************************************************************************
கருணையையே கொடூர கொலை செய்யும்.......
மரணித்த மனிதம்.