பாவி மனிதன்…அப்பாவி மனிதன்

பாவி மனிதனுக்கு புரண்டு படுக்க
போதிய இடம் இல்லை
மரங்களை வெட்டியும் குளங்களை வற்றியும்..
இடப் பற்றாக் குறை

பாவி மனிதனுக்கு போதிய வளம் இல்லை
ஊதிய உயர்வும், ஊர்தியும் உணவும்
போதிய வரையில் நிரம்பிய போதும்
வீங்கி புடைத்து நிற்கும் சந்தையில்
வாடி உதிரும் வெங்காயக் கற்றைகள்

பாவி மனிதனின் ஊட்டச் சத்தெல்லாம்
மொத்த குத்தகைக்கு புகையாய் கக்கும்
சாலைகள்…தொழிற் சாலைகள்
விதைக்கப்ப்டாத வெங்காயங்களால்
அறுக்கப்படும் வினைகள்

இன்னும்..
குளங்கள் குட்டைகள் அதில்
எறியப்படும் குப்பைகள் மட்டைகள்
கரப்பானுக்கும் கொசுவுக்கும் குறிக்கப்படும்
மரண நாட்கள்
அதில் தானும் கருகிக் கொண்டே..
பாவி மனிதன்…அப்பாவி மனிதன்

எழுதியவர் : விநாய்கபாரதி.மு (22-Apr-14, 5:35 pm)
பார்வை : 176

மேலே