அடுத்த வருடம்
உன் அருகில் அமர்ந்து
உன் விழிகளில் என்னை கண்டு
உன் இதழோர புன்னகையை ரசித்து
உன் கை விரல்கள் கோர்த்து
உன் நெஞ்சில் முகம் புதைத்து
உன் தலை முடி கோத
ஒரு நொடி உலகை மறந்து
என்னவனே எனக்காக உலகில் பிறந்ததற்கு
கடவுளுக்கு நன்றி
உனக்கும் நன்றி
என்று கூற விரும்புகிறேன்
முகம் காண துடிக்கும் எனக்கு
உன் குரல்களே கிடைத்தன
இம்முறையும் ஆசை கொண்டேன்
ஆனாலும் காத்திருக்கிறேன்
அடுத்த வருடம் இந்த நொடி உன்னுடன்
நான் இருபேன் என்ற கனவோடு...
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
என் இனியவனே
என்னவனே