உன் பிறந்த நாள்

பேசாத மௌனங்கள்
இதழ் ஓரமாய் மறைத்த புன்னகைகள்
கோபத்தில் முளைத்த சண்டைகள்
அன்பினில் உருவான சின்ன சின்ன ஊடல்கள்
பிரிவில் கசிந்த கண்ணீர் துளிகள்
பெண்மையை உணர்த்திய வெட்கங்கள்
தோல் மீது சாய்ந்த இதங்கள்
தன் நிலை மறந்த நேரங்கள்
உலகம் மறந்த நொடிகள்
இன்னும்
எத்தனை தான்
உன் வருகையால் உணர்த்தினாய்
அதனால் தான்
இன்று உன்னை உலகினில் மலர செய்த
இறைவனிடம் நன்றி கூறுகிறேன்
உன்னை எனக்காக அனுபியதற்கு

எழுதியவர் : பெர்சியா (22-Apr-14, 11:27 pm)
Tanglish : un pirantha naal
பார்வை : 88

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே