சிறப்புக் கவிதை 26 அனுசரண் தோழமை - வாசிப்பு

தோழமை - வாசிப்பு

நீ நானாக இருக்கின்ற எனக்குள்ளும்
நான் நீயாக இருக்கின்ற
உனக்குள்ளும்
எப்படி பேசப்போகிறோம்

நீ நீயாக
இனிக்க இனிக்கப் பேசுகையில்
தாள் திறந்து
முட்டாய்ப் பார்க்கின்ற
குழந்தையாகிறேன்
ஏதோவொரு ஆர்வத்தில்

அயல் ஒளியின்
ஓர் ஊடுருவலின் வழியில்
உன் புற்றீசல் நனவுகள்
என் புனைவுக்கின்றெல்லாம் ஊனாகியது

உன் காதல் வேண்டுமென
விரல்பட்ட என்பேனா
இன்று தானாய்க் கிறுக்குகிறது

ஆகிருதியில் தாளத்தோடு சொட்டுகிறது
சொல்லியும் நிற்காத ஆழியிற்புதையுண்ட
சொல்லுருக்கள்

புத்தகம் என்னும் உன்னுருவிலே
ஸ்பரிசித்தத் தொடக்கத்தில்
என்னுடனான உன்
வார்த்தைப் பரிமாற்றங்களை எண்ணி

கடைசியாக ஒருமுறை
தேனருந்திய பிரியக்கவளம்
உன்னிதழ்த்தாள் முத்தம்

தனிமையில் வயிறழுந்தப்படுத்த ஓரிரவில்
அந்த பிரியங்களை
வரவேற்கும் பிடிவாதத்திற்கு
வழியனுப்பத் தெரியவில்லை ஏனோ

எழுதியவர் : அனுசரண் (23-Apr-14, 1:39 pm)
பார்வை : 98

மேலே