தவறு விட்டவர்கள் திருந்துவதில்லையா

நம் காதலில்
நடந்தவை ஒரு சின்ன
விபத்து என்றால் என்
காதலி -நீயும் தவறு விட்டாய்
நானும் தவறு விட்டேன்
தவறு விட்டவர்கள்
திருந்துவதில்லையா ...?

உயிரே
உடலில் பெரிய காயம்
கூட மாறிவிடும் சிலகாலம்
ஆனால் உளத்தில் வந்த சிறு
துளி காயம் வடுவாக இருக்கும்
வாழ்நாள் வரை ....!!!

உனக்கு இது சிறு
விபத்து -எனக்கு இது
அவசர விபத்து பிரிவில்
கோமா நிலை - நான் கோமாவில்
இருப்பதால் தான் உன்னோடு
பேசவில்லை - நீயோ நான்
கோபித்து கொண்டிருக்கிறேன்
என்று நினைக்கிறாய் ....!!!

என் உயிர் பிரிய முன்
என் உயிரே நீ வந்து பேசு
உன் உயிர் நான் தான் என்று
காதலுக்கு காத்திருத்தல் சுகம்
காதல் தோல்விக்கு காத்திருத்தல்
ஆயுள் பறிக்கும் பாச கயிறு ...!!!

எழுதியவர் : கே இனியவன் (23-Apr-14, 3:27 pm)
பார்வை : 251

மேலே