கலக்கம் வேண்டாம் தோழி

இந்த காரிருள்
நிலைப்பதில்லை தோழி..!!

மெழுகின் ஒளியாய்
சில உறவுகள் உனக்காய்
திரி கொண்டு ஒளிதர
காத்திருக்கின்றது தோழி..!!

கண்ணீர் துடைத்து
விழித்திரை கரைத்து
மனம் கொண்டு
பார்த்திடு தோழி..!!

ஏமாற்றம்
படிப்பினையே
என் அன்புத் தோழி..!!

மாயை
விரைவில்
மறைந்துவிடும் தோழி
மனமும் அதிலே
மறைந்து விட்டால்
மண்ணில் மனிதம்
தழைக்காது தோழி..!!

உலகம்
உனக்கானது தோழி..!!

உறவுகள் புதியது
உன்னை அழைத்து
பாசம் கொண்டு முத்தமிட
கை நீட்டி காத்திருக்கின்றது தோழி..!!

இழப்புகள்
வாழ்க்கையின்
இறுதியல்ல தோழி..!!

இந்த உலகம்
விசித்திரமானது தோழி..!!

இன்முகம் கொண்டு
எழுந்து வந்திடு தோழி..!!

வாழ்க்கை
வாழ நினைபவர்க்கு
மிக அழகிய
வழி ஒன்றை
வடிவமைத்து
வைத்திருக்கின்றது
என் இனிய தோழி..!!

எழுதியவர் : வெ கண்ணன் (23-Apr-14, 8:11 pm)
பார்வை : 511

மேலே