ஓட்டுக் குத்து - மணியன்

வாங்க வாங்க அண்ணாச்சி
வாக்களிங்க அண்ணாச்சி
வக்கனையாய் நான் போட்ட
வாக்கில் அஞ்சு வருசம் வீணாச்சி. . . .
ஏழை நானும் இது வரை்க்கும்
எத்தனை தேர்தல் பார்த்தாச்சு.
ஏணியென இருந்த எனக்கு
எலிக்கறிதான் சோறாச்சு. . . .
சாக்கடையில் கிடக்கும் என்னை
பூக்கடையின் பக்கம் நின்னு
மூக்கு மூடி நீங்கள் கேட்ட
வாக்கு ஒண்ணும் போட்டாச்சு . . . . .
கூட்டம் போட்டு நீங்கள் சேர்ந்து
போட்ட ஆட்டம் முடிஞ்சாச்சு. . .
கூனி வளைந்த என் முதுகு
இன்று மட்டும் நிமிர்ந்தாச்சு . . . . .
அஞ்சி வாழும் என்னிடம்
கெஞ்சி நீரும் கேட்ட வாக்கு
விரலில் வைத்த மை காயுமுன்னர்
வீர நடை காட்டாதீர் . . . . .
ஆனைக்கும் அடி சறுக்கும்
ஆள்பவரும் ஆட்டம் காணும்
அஞ்சு ஆண்டு மீண்டும் வரும்
அது வரைக்கும் காத்திருப்போம். . . . .
குளக்கரையில் கொக்கைப் போல
கும்மியாட்டம் பார்த்து ரசிப்போம்
குதர்க்கம் செய்து கொக்கரித்தால்
குத்து விட்டு விழவும் வைப்போம் . . . . .
*-*-*-* *-*-*-* *-*-*-*