உழைப்பு

உழைப்பு!!!! - ஏதிங்கே?.......
செத்தவனைக் கூட விற்றுத் திண்ணும் வாழ்க்கை-இந்தியாவில்....
ஏரோட்டும் உழவன் கூட ஏளனமாக சிரிக்கின்றான் உழைப்பா?
ஒழுக்கங்கெட்டவனே ஓடிவிடு என்று.....
ஒவ்வொரு சந்திலும் ஒயின் ஷாப்..
தேவைக்காக மக்களையே கூறுபோடும் - இந்த
திருடர்களை என்ன செய்ய?....

கண்ணிருந்தும் குருடர்களாய் - நம் மக்கள்....
உழைப்பை உறங்க வைத்து.... சோம்பேறிகளாய்...
தமிழ் அகராதியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் இவ்வார்த்தை
விரைவில் வீழ்ந்து விடுமோ என்னவோ?

- வருத்ததுடன் கிராமத்து கவி பாலா....

எழுதியவர் : Balaji vpp (24-Apr-14, 7:05 pm)
Tanglish : ulaippu
பார்வை : 113

மேலே