பனித்துழி
நான் இளம் குறுத்தோலை என் முதல்பனியின் பிரிவு அது..
வலைந்த என் உடல்மேல் உறைந்த அந்த பனித்துழி கரைந்து விழும் நேரம் என் மனம்... அந்த பகல் கட்டவண்டி பாய்ந்தோட பயத்தில் என்மனம் சிறு இடியில் தாய்மறைவில் நடங்கிவிலும் சேய்போல நானும் கொஞ்சம் ஒதுங்கியே நின்று கொண்டேன். எங்கோதூரத்தில் ரயில் கூவும் சத்தம் கேட்க என்னைக்கடந்த இளம் ஜோடி ஒன்று கால்படாமல் தாண்டி செல்ல மேல்சென்ற பெருமூச்சு நெஞ்சில் தங்கும் சிறுமூச்சு.. வான் உலகில் முகில் இல்லா அந்த தனி உலகில் பேரரசன் என்தந்தை கோவத்தில் என்னை கொஞ்சம் வாட்டித்தான் வதைக்கிறான்.., சற்றுநேர நிசத்தம் முடிந்தவுடன் அழகிய ஒற்றை குருவி வர பின் தொடர்ந்து தென்றல் வர என் அருகில் என் சகோதரி காதல் விளையாட்டில் தானைமறந்து பூக்களை தவரவீட்டால் தேன்குடித்த வண்டு செல்ல என் அக்கா மயங்கிவிட்டால் பெரும் படையால் வெள்ளாட்டுக்கூட்டம் நானும் தான் மயங்கி விட்டேன் என்னதான் நடக்குமோ தெரியவில்லை நான் இறந்து விட்டேனா முகில்நடுவே மிதக்கிரேனா... என்மேல் அந்த துழி விழ வே முழுத்துப்பார்தேன் ஜில் என்று தேகம் குளிர என் நாள் முடிந்து என் தேகம் சிலிர்த்ததம்மா எனக்கும் அந்த பனிதுழி மேல் காதல் வந்து வகுநேரம்ஆய்விட்டதோ என்னதான் நான் செய்ய என்மனம் அந்த பனியை கொஞ்சம் தழுவத்தான் விரும்பியது என்காதல் முடியும் அந்த நேரம் இது என் தந்தை தூங்கி எழ என் காதலன் எனைகைவிட்டு போய்விட்டான்...