இயற்கையுடன் கொண்டாடுவோம்
சூரியன்,
தன் ஒளிக்கதிர்களை நமக்களித்து
தன் நாளை கொண்டாடுகிறது!
வானம்,
தன் உடலை போர்வையாக்கி,நம்மை அரவணைத்து
தன் நாளை கொண்டாடுகிறது!
காற்று,
தன் கைகளால் நம்மைத்தழுவி,பரவசப்படுத்தி
தன் நாளை கொண்டாடுகிறது!
நதி,
தன் சக்தி கொண்டு நம்மை வளப்படுத்தி
தன் நாளை கொண்டாடுகிறது!
பறவை,
தன் மழலைக் கூக்குரலால் நம்மை மகிழ்வித்து
தன் நாளை கொண்டாடுகிறது!
மரங்கள்,
தன் காய் கனிகளால் நம் பசியாற்றி
தன் நாளை கொண்டாடுகிறது!
இயற்கைத் தாயின் வளர்ப்பில் ஐயம் இல்லை.
சுயனலமில்லா குழந்தைகள் இவை..
அப்படியிருக்க எங்கிருந்தம்மா பெற்றெடுத்தாய்
இந்த மனிதனை ?
நதியில் கழிவு நீரைக் கலப்பதும்,
விஷ வாயுவை காற்றுடன் சேர்ப்பதும்,
மரைங்களை அழித்து நகரம் அமைப்பதும்,
விலங்குகளை கொன்று குவிப்பதுமாய்...
உடன் பிறந்தோருக்கே தீங்கு செய்யும் குணம்,
கருணையில்லா மனம் ,
சுயனலத்தின் மொத்த உருவமாய்...
தறுதலையாய் போகட்டும் என்று விட்டுவிடாயா?
இவர்களிடம் கூறு,
மனதார அன்பு பாராட்டி,
அனைவரையும் அரவனைத்து,
எதையும் எதிர்பாராமல் சேவை செய்து,
எந்நாளும் நாம் கொண்டாடுவோம் என்று!!!