ஒடுகிற தண்ணியில
பெண்கள்,தங்கள் காதலை, காதல் உணர்வுகளை ஆண்களிடம் வெளிப்படுத்துகின்ற வழக்கம் பண்டைய தமிழ்ச்சமூகம்தொட்டே இருந்துவந்ததில்லை.
வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர்கூட இதை ஊக்குவிக்கவில்லை.
களவுக்காலத்தில் தலைவியோடு கூடி மகிழ்ந்த தலைவனிடம் தன்னை விரைவில் வந்து திருமணம் செய்துகொள்ளச்சொல்லுகின்ற உறிமை தலைவிக்கு இருந்ததில்லை.
தோழிமட்டுமே அந்த வற்புருத்துதலைச்செய்திருக்கிறாள்.
இதனை இலக்கண நூலார் வரைவுகடாஅதல் எனக்கூறுகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டுவரையில் தமிவ் இலக்கியத்தின் போக்கு இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றது.
இன்றைய நாகரிகப்பட்ட சமூகத்தில் ஒரு பெண் தன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தினால்அ ்வளை வேசியாகவும், விலைமகளாகவும் பார்க்கின்ற ஆணாதிக்க சமுதாயமும் இருக்கவே செய்கிரது.
இலக்கியத்தில் இதனை கட்டுடைத்த பெருமை பாவேந்தர் பாரதிதாசனையே சாரும்.
[ கூடத்திலே மனப்பாடத்திலே -விழிகூடிக் கிடந்திடும்
ஆணழகைஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்- அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலேபாடம் படித்து நிமிர்ந்த
விழி-தனிற்பட்டுத் தெரித்தது மானின்விழி!
ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன்
ஆயிரன் ஏடு திருப்புகின்றான். ]
என்ற கவிதையின் வாயிலாக ஆணுக்கும் அச்சமுண்டு, பெண்ணுக்கும் பேச்சுண்டு என புதுமை செய்திருக்கிறார்.
இப்படி தன் படைப்புகள்தோரும் புதுமைகளைப்புகுத்தியதனால்தான் புரட்சிக்கவி என அழைக்கப்பட்டார்போலும்!
திரையிசை உலகில் இத்தகைய கட்டுடைப்புகளை கவியரசு கண்ணதாசன் நிகழ்த்தியபின் அதன் பிறகு வந்த வைரமுத்துவும் அதனைத் தொடர்ந்தார்.
அச்சமில்லை அச்சமில்லை எனுண் படத்தில் இடம்பெற்ற ஓடுகிற தண்ணியில எனத்தொடங்கும் பாடல் இதற்கு ஒரு சான்றாகும்.
தன்னிடம் வயலின் வாசிக்கும் திரு v.s. நரசிம்மன் தன்னைவிட அறிவாளி என ஒரு நிகழ்ச்சியில் இளயராஜா சொல்லக்கேட்ட பாலச்சந்தர் தனது அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு இசையமைப்பாளராக நரசிம்மன் அவர்களை நியமித்தார்.
அவர் இசையமைத்த முதல் பாடல்தான் வைரமுத்துவின் இந்த நாட்டுப்பாட்டு!
இலக்கியத்தில் தமிழ் விடு தூது. மேக விடு தூது, நெஞ்சு விடு தூது, கிள்ளை விடு தூது, குருகு விடு தூது என பலவகையான தூதுகளை படித்திருக்கிறோம், ஆனால் இது தலைவனுக்கு தலைவி விடும் அருவி விடு தூது.
அந்த அருவியின் மேற்கரையில் அவள், கீழ்க்கரையில் அவன். உரசிவிட்ட சந்தனத்தோடும் ஒலையோடும் முத்தத்தையும் சேர்த்து தூதாக அனுப்புகிறாள் ்அவள்.
[ தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற?
நீ எப்ப வந்து தரப்போற?]
என தன் காதல் உணர்வை கேள்வியால் வெளிப்படுத்துகிறாள்.
[அருவி போல அழுகிறநே அறிந்துகொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஒரமென்னை முடிந்துகொண்டால் ஆகாதோ?]
என அவன் கேட்க,
[வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ?
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வேளக்கப் போறதெப்போ?]
என கால நீட்டிப்பு செய்யும் காதலனை தன் காதலால் கண்டிக்கின்றாள் தலைவி!
இதோ இப்பாடல்!
படம் : அச்சமில்லை அச்சமில்லை
பாடல்: ஓடுகிற தண்ணியில
குரல்: மலேஷ்யா வாசுதேவன், சுசீலா
வரிகள்: வைரமுத்து
மேகத்தத் தூதுவிட்டா தெச மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற?
நீ எப்ப வந்து தரப்போற?
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஒல ஒண்ணு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் கைகளிலே
அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே
கொடையும் இல்ல படையும் இல்ல தூறலுக்கு ஆதரவா
தாவணிய நீ பிழிய தல தொவட்ட நான் வரவா
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்
அய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்
(ஓடுகிற)
மலர்த் தோட்டத்து குயிலே இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க
அருவி போல அழுகிறனே அறிந்துகொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஒரமென்னை முடிந்துகொண்டால் ஆகாதோ?
வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ?
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வௌளக்கப் போறதெப்போ?
(ஓடுகிற)