சிறப்புக் கவிதைகள் 43 சிந்தா முதுமையில் தனிமை

முதுமையில் தனிமை
முதியோர் இல்லத்தை விட
வேதனையும் வெறுமையுமாய்
தனித்து விடப்பட்டிருக்கும்
தன் வீடு.
*******************************
அந்நிய பூமியில்
சொந்த விழுதுகளை
தொலைத்து விட்டு
சதை பிண்டத்துடன்- ஓர்
உயிர் போராட்டம்.
******************************
கோயில் திண்டிலும்
பூங்கா இருக்கையிலும்
தனிமைக் கொல்லா
இனிமை இருப்புகள்
தன்வீட்டிலோ
நரகத் தவிப்புகள்
******************************
மரங்களும் தூண்களும்
மட்டும்
மவுன மொழிகளை
சேவிமடுக்கும்.
ஊமையாய் நிற்கும்
சுய சரிதைகள்
******************************
மறதியெனும் மருந்தில் தான்
நாள்தோறும் நசுக்கப்படும்
நினைவுக்கொல்லிகள்.......
**********************************
வீட்டில்
தூசிபடியாமல்
துடைக்கப்படும்
தொலைப்பேசி மட்டும்....
************************************
எப்போதாவது ஓர்
அழைப்போசை கேட்காதா....
ஏங்கும் விழிகளை
ஈரப்படுத்தாமல்
கண்ணீரும் ஏமாற்றும்
**************************************



முதுமையில் தனிமை
முற்றிலும் கொடுமை
விழுதுகளின்
வெற்று சுயமரியாதைக்காய்
வீட்டுச் சிறையாகும்
முதுமையில் தன் இல்லம்...
*******************************************
செத்து..செத்து
செத்தே...போகும்
பந்தமும் பாசமும்
சாக முடியா சதைப்பிண்டம்
சாகடிக்கும்
நித்தம்... நித்தம்.
முதுமையில் தனிமை

எழுதியவர் : சிந்தா (26-Apr-14, 3:17 pm)
சேர்த்தது : agan
பார்வை : 103

மேலே