அவளுக்கு பதில் இன்னொருத்தி

புரியாத வரம்
அது காதல்
எனக்கு மட்டும்
ஒரு புதிராகவே இருந்தது

அவளை
காணும் மட்டும்
நான் நானாகவே இருந்தேன்

அந்த கணம்
என் பார்வையில்
அவள் முகம்

என்னுள்ளே எந்தனை
பட்டாம் பூச்சிகள்
என் ஆன்மா மட்டும்
ஏதோ ஒரு உலகில்
நான் இருந்தும் இல்லாதவனாக

என்னுள்ளே தோன்றிய
அதே காதல் அதிர்வுகள்
அவளுக்குள்ளும் .....

நான் அவள் முகம் பார்க்க
அவள் என் முகம் பார்க்க
என் விழிகளும்
அவள் விழிகளும்
காதல் காவியமொன்றை படைத்தது
நாங்கள் மௌனிகளாக இருந்தும்

என்னை பிரியாமல் அவளும்
அவளை பிரியாமல் நானும்
பொழுதொன்று பாராது
புதைந்தே இருந்தோம்
ஒருவருக்குள் ஒருவராக

அந்த வினாடி
அவளின் அழகு முகத்தை
என்னை தினம்
காணாமல் செய்த
விபத்து

நான் இருந்தும் இல்லாமல் இருந்தேன்
காதலால் அல்ல
அன்று
கவலையால்

காதலையும் மாற்றும் காலம்
கவலையையும் கரைக்கும் காலம்
என்னையும் மாற்றியது
என் காதலி நினைத்த படி
இரு குழந்தைகளின் தந்தையாக
ஆனால்
அவளுக்கு பதில் இன்னொருத்தி

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (26-Apr-14, 6:13 pm)
பார்வை : 143

மேலே