உனக்குள் என் நினைவுகள் இருக்கும்

நீ மறந்தும்
உன்மீது
கோவமில்லை..
நான் நிஜம் வெறுத்தும்
என் காதல் கொன்று
சாகவில்லை..
உன் நினைவுகள்
சுமந்து நான்
கண்டகனவில்..
மரித்த என்கால்களுக்கு
மலர்வைத்து நீ வடித்த
ஒருதுளி கண்ணீரில்..
உன்மனதில்
எனக்கான இடம்
நான் அறிந்தேன்..
என்காதல்
உன்னில் கண்ணீராக
நான் மரிக்கவிரும்பவில்லை..
என் நிஜங்கள் என்றும்
உன் மனதில் மறைந்து
புன்னகை பூக்கட்டும்..!
உன் நினைவுகள் சுமந்தே
என் இறப்பை தூரமாக்கி
தனிமையில் வாழ்வேன்..
உன் புன்னகை மட்டும் பார்பவனாய்..!
...கவிபாரதி...