மாறி விடு தம்பி

மனித சத்தம் வாகன
சத்தத்திற்கு
அசைந்து கொடுக்காமல்
சிக்னலில் படுத்துக் கிடக்கும்
சாந்த சொருபியான
பசு மாடு !

நடு நிசியில் சினிமா முடிந்தோ
நடுச் சாமத்தில் கொள்ளையன்
புகுந்ததையோ கண்டும்
காணமால் மன்னிக்கவும்
குரைக்காமல் தேமே என
சுற்றித் திரியும்
காவல் நாய்கள் !

சாப்பாடு என சொல்லக்
குறையாக கத்தியே
கரைச்சல் கொடுத்து
காரியம் சாதிக்கும்
கார்ப்பாரேட் கபேட‌ரியாவிலும்
அடுக்கு மாடியிலும்
நிற்கும் காக்காக்கள்

கடா மீசை கண்டிப்பான
சிங்க அப்பாக்கள்
காணாமல் போய்
பூனை குட்டியாய் பையன் வாங்கி
தந்த அமெரிக்கா செல்பேசியில்
புகைப்படம் எடுக்க போலியாய்
புன்னைகைக்கும் உதடுகள் !

எல்லா தொலைக்காட்சி
விவாத மேடையும் எவன்
பேசுவதையும் எவனும் கேட்காமல்
காட்டுக் கூச்சல் கத்தி கம்மென்று
இரண்டு மணி நேரம் பேந்த
பேந்த பார்த்த நம்மை பார்த்து
நன்றி சொல்லி மறைந்து விடுகிறார்கள்

தன் தன்மானத் தலைவனை
உரசினாலே தீக்குளிக்க
துடிக்கும் தொண்டன்கள்
காணாமல் போய்
ஆறு வருஷம் தலைவர்
ஜெயிலுக்கு போனாலும்
சாந்த சொருபி சாமியார்களாய்
தொண்டன்கள் !

கிராமத்திலும், சினிமாவிலும்
பரிட்சயமான வெள்ளை வேட்டி
சட்டை போட்டு வெள்ளந்தியாய்
ஊருக்கு நல்லது செய்யும்
பெருசுக்கள் எங்கோ போய்
அரசியல் ராஜாக்களும் ,ரவுடி
கூஜாக்களுக்கும் அணியும்
சீருடையாகிய வெண்ணிறாடை
நம்மை
பார்த்து கேலி செய்ததது!.

மாற்றங்களை மரமாத்து செய்வோம் , மறுபடியும் புது விதி செய்வோம் !

எழுதியவர் : கண்ணன் (26-Apr-14, 11:24 pm)
சேர்த்தது : aristokanna
Tanglish : maari vidu thambi
பார்வை : 109

மேலே