ஓவியம் புன்னகை பூத்த மலராக

திறந்த புத்தக பக்கமொன்றில்
கண்டேன் வரைந்த ஓவியம்
இமை மூடி இதழோரம்
புன்னகை பூத்த மலராக .... .... ....

மலர்ந்ததனால் செடிக்குப் பெருமை
வரைந்ததனால் அவனுக்குப் பெருமை
கண்டதனால் என்னில் குளுமை
மனதினில் தழுவிட இனிமை ... ... ...

மொழியறியா அவளது விழிகளிலிருந்து
ஒவ்வொருநொடியும் ஒரு மொழியொன்று
இடை விடாமல் என்னிடையே
ஏதோ ஒன்றைச் சொல்லிசென்றது ... ... ...

நயனமொழி அறியா நானும்
என்னவென்றே தெரியாமல் நின்று
உயிர்ப் பெற்ற பெண்ணோயென்று
ஓவியமதனை உணர்ந்தேன் நானே ... ... ...

என்மனம் இதனால் இன்று
சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியாய்
அலை பாயும் கடல்நீராய்
அவளின் கரைச்சேர துடிக்கின்றது ... ... ...

திறந்தப்புத்தகம் உலகம் தன்னில்
ஓவியமாய் வந்தப் பெண்ணை
கண்டிடவே துடிக்கின்றேன் நானே
கண்டவர்கள் என்னிடம் சொல்வார்களாயென்று ...

ந தெய்வசிகாமணி

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (29-Apr-14, 1:09 am)
பார்வை : 118

மேலே