நல்ல தமிழே வேண்டும்
தமிழ் வேண்டும் ,
என்றென்றும்
நற்தமிழே வேண்டும்.
தரணியெங்கும் நற்தமிழ்
தடை நீங்கி அருவிஎனப்
பாய்தல் வேண்டும் ,
தன்னிகரில்லாத்
தனித்தமிழ் நுனி நாவில்
தவம் புரிதல் வேண்டும்.
கொஞ்சும் நற்தமிழ்
எங்கும் குலாவித்
தவழல் வேண்டும்,
கொச்சைத் தமிழ்தனை
களைந்தே பேசுதலில்
கவனம் வேண்டும். (ஊடகம்/மேடைகளில்)
விருந்தென வரும்
மொழிதனில் விருப்பம்
கொள்ளாமை வேண்டும்.
அது பெருமைஎன்று
பகட்டும் மனதெல்லாம்
மாற்றம் பெறுதல் வேண்டும்.
அமிழ்தினும் இனிய
நம் மொழிதனின் அருமை
உணர்தல் வேண்டும்,
அது பண்பட்டது ஐந்தாயிரம்
அகவைக்கு மேல் என்று
அறிந்திடவேண்டும்.
அமுது தமிழ்
உயிர்மூச்செனக்
கொண்டிடல் வேண்டும் .
தமிழ் வேண்டும் ,
என்றென்றும்
நற்தமிழே வேண்டும்....