சங்கப்பெண் பாற்புலவர் ஆய்வுவிழா

சங்கப்பெண் பாற்புலவர் ஆய்வுவிழாச் செய்திபடம்,
தங்கநிகர் செந்தமிழ்இ தழ்மணம், மற்றும்
ஜெயமோகன் ஆக்கம்சொல் நல்இராயர் சிந்தை,
பலநோக்கில் ஆய்ந்துகுறள் சொல்செய் அரங்கர்,
உலாத்தொடர் நல்கும் இராசா, புகழ்கொள்
மதுரை புதுமண்ட பத்துவிந்தை சொல்லி
மதுமலர்நேர் ஆக்க நிரல்சுட்டித் தேசிகர்
வெள்ளியம்ப லத்தார் வெகுபுகழ்முன் வைப்பு,
களிமண்வாழ்க் கைப்பா வழிவேந்தர் ஈகை,
முருகசாமி சொல்ஆய் பெருமாள்ஆய் வுச்சொல்
உருவாக்கம், மேரியாய்வு, இந்திரா ஆக்கமொடு,
வீரசக்தி வேல்படைப்பும் நன்று!

கருத்தும், விமர்சனமும் வரவேற்கிறேன்.

எழுதியவர் : (28-Apr-14, 11:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 110

மேலே