அறிந்துவிட்டேன் உன்னை

Love :
நிலவை பார்க்க சென்றுவிட்டேன்... உன்
நிழலிலே நிலவு இருப்பதை மறந்துவிட்டேன்..!
கடற்கரையை பார்க்க சென்றுவிட்டேன்... உன்
கண்களிலே அலைகள் தோன்றுவதை அறிந்துவிட்டேன்..!
உலகைச் சுற்றி வர சென்றுவிட்டேன்... உன்
உதட்டிலே உலகம் என்று நினைத்துவிட்டேன்..!
இலை மீது ஏறி பறந்து சென்றுவிட்டேன்... உன்
இதயமே என் இதயத்தில் பறப்பதை நான் மகிழ்ந்துவிட்டேன்..!