அன்னையின் புன்னைகையே புத்துணர்வு

பிறப்பதும் இறப்பதும் ஒருமுறையே
வாழ்வதும் வையகத்தில் ஒருமுறை !
வாழும் காலத்தில் நாம் செய்வதென்ன
போகும்போது நம்முடன் வருவதென்ன !
அன்னை தெரசாவை மறக்க முடியுமா
ஆற்றிய தொண்டினை மறுக்க இயலுமா !
அயல்நாட்டவர் ஆனாலும் அன்னையே
செயலாற்றிய விதமும் மிக அற்புதமே !
ஈடேது இணையேது அவர் உள்ளத்திற்கு
ஈர்த்திடும் உருவம் ஈரமுள்ள நெஞ்சம் !
ஏழைகளை கண்டதும் உருகிடும் உள்ளம்
ஆதரவு அற்றோர் அவரின் பிள்ளைகள் !
மூப்பு அடைந்தாலும் தளரவே இல்லை
முடிந்தவரை செய்தாரே உதவிகளை !
இறுதி மூச்சு உள்ளவரை இயங்கினாரே
உறுதியாய் இருந்தாரே கொள்கையிலே !
இறக்கும்வரை இருநதாரே இரக்கமுடன்
இறந்தபின்னும் வாழ்கிறார் இதயத்திலே !
அளவிட முடியாது ஆற்றிய பணிகளை
அலைகடல் ஆழம் அவர்தம் நெஞ்சம் !
முகவரி அறியா மழலைகளின் தாயாக
அகமகிழ்வுடன் அணைத்தார் தன் சேயாக !
அநாதை குழந்தைகளுக்கு அன்னையாக
அன்புடன் வளர்த்திட்டார் தன் சேயாக !
நோயுற்ற தேகங்களுக்கு செவிலியாக
காத்திட்டார் கருணைமிகு மருத்துவராக !
அன்னையின் புன்னைகையே புத்துணர்வு
அரவணைப்பே ஆயுள்வரை அகமருந்து !
போற்றுவோம் தாயின் பொன்மனதை
வணங்குவோம் அன்னையை நாளும் !
வாழும்வரை உதவிடுவோம் நாமும்
வழிநடப்போம் அவர்தம் பாதையிலே !
பழனி குமார்