சுதந்திரம் கிடைத்து விட்டது தெரியுமா

நம் தமிழ் நாட்டிலே!
நம் சொந்த தாய் நாட்டிலே!
அடிமையாகவும் ,பாவ ஜீவன்களாய் இருந்த
காலத்தை நினைத்தால்,
நமக்கு உடனே நினைவுக்கு வருகின்றன!
பல நூறு தலைவர்களின் தியாகம்!...
அடடே!..........
வெள்ளை கார பாவிகளின் பிடியில்
இருந்து தப்பித்து விட்டோமே?
இதற்கு காரணமான தலைவர்களின் ஆன்மா இதை
கொஞ்சம் கூட அனுபவிக்கவில்லை!
பல கோடி மக்களின் உயிரை காக்க
அவர்கள் சொர்க்கம் சென்று விட்டனர்!
ஆனால் நாமோ?.............
அவர்கள் வாங்கி தந்த
சுதந்திரத்தை பேணுவதில்லை?...........
நாட்டின் சுதந்திர தாகம் இன்னும்
நம்மிடையே தீரவில்லை?..........
தியாகிகளை போல நாம்
இரத்தம் சிந்த வேண்டாம்!
அந்நிய பிடியில் இருந்து காப்பாற்றிய
நமது தாய் திரு நாட்டை
நம்மால் முடிந்த அளவு பேணி
காக்க வேண்டும் அல்லவா?.........
இனியும் என்ன தயக்கம்,
வாருங்கள் சங்கொலி
எழுப்பிய படி வீறு கொண்டு
எழுந்து நாட்டை காக்க செல்வோம் ! நமது தேச தியாகிகளின் ஆசிர்வாதத்துடன்!
வாருங்கள், தோழர்,தோழிகளே!.............

எழுதியவர் : கௌசல்யா (2-May-14, 3:30 pm)
பார்வை : 281

மேலே