காதல் கிறுக்கல்
எதேட்சைப் பார்வையில்
உன் முகம் என்னுள் பதித்துவிட்டாய்
உச்சி முதல் பதம் வரை
நீயே என்னுள் மாற்றம் தந்தாய்
அத்தனைப் பெண்களை கடந்து வந்தும்
உன் போல் யாரும் வதைக்கவில்லை
உயிர் நோக எவரும் செய்ததில்லை
விழி வழி என் ஜீவன் கலந்து விட்டாய் தினம்
கவி வழி உன்னை தேட செய்துவிட்டாய்
அன்பே என்னுள் உறைந்து விட்டாய் என்
ஆவி உனக்குள் கலந்து விட்டாய்
உன் கரங்களின் அரவணைப்பில்
நான் கைதி ஆகின்றேன்
உன்னுடன் வாழ்வதென்றால்
ஆயுள் முழுவதும் இருத்தி விடு
அன்பே நீ இல்லை என்றால்
கழுவிலேனும் ஏத்தி விடு
இரும்பின் குணமாய் இருந்தவன் தானே
விரும்பித் தொடரும் மாயம் செய்தாய்
பொய்யாய் கோபம் காட்டிடுவாய் பின்
ஒய்யாரம் காட்டி சிரித்திடுவாய்
சேர்ந்து களித்த நேரம் எல்லாம்
சேரா வார்த்தைகள் கோர்த்தே வைத்தேன்
பிரிந்திடும் நேரம் வரும் போதோ
அறிந்த மொழியும் மௌனித்திடுமே
என் நெஞ்சம் முழுதாய் கனந்திடுமே!!!