திருவந்தாதி தொடர்ச்சி-3
3)
செயலினை ஓர்ந்து செகத்தில்
செழித்திடும் வாழ்வு தந்து,
இயல்பினை கூட்டி ,இனிக்கும்
அறமதை ஆக்கித்தந்து ,
முயல்கின்ற போது முனையும்
துணிவின் திறமறிந்து,
மயங்கிடும் மாந்தர் மனவிருள்
போக்கும் ஒளிநிறைத்து,
4)
ஒளியாய் படர்ந்து உலகை
உணர்த்தும் கவியழகும்,
களியாய் மலர்ந்து ,கயலாய்
விளைந்த விழியழகும் ,
புளிக்கும் புணர்வும் ,புரிந்திடும்
செயலும் எடுத்துக்காட்டி ,
எளியவன் சீராய் எழுத்தில்
வரணும் போலன்கொடியே !