காதல் - கால்பந்து

அதிகாலையும்
அந்திமாலையும்

பூங்கா எனும்
மைதானத்தின்
மையத்தில்

பறந்து பறந்து
பரவசம் தரும்
அடிபட்டும்
அன்பு தரும்

எங்கு சென்றும்
உனக்காய் வந்து
விழிக்கு
விருந்து தரும்

வலையில் பட்டும்
வருத்தம் இன்றி
இலக்கை தொட்டு
இன்பம் தரும்


இப்படி ...,,,
உயிர் காற்றை
உள்வாங்கிய
காதல் எனும்
கால்பந்தை

உதைத்து உதைத்து
உணர்வுகளை
உடைக்கும்
காதலர்களின்

விழி அன்றி
விரல் பேச

பூ போன்ற
காதல்
புனிதம் கெட்டது
புல்வெளியில்

விபரீதம்
வீட்டிற்கு வந்து

வீணாய் போனது
வாழ்வின் வசந்தம்

இனியும் காதல்
இதுவென சொல்லி

உயிர் சுமக்கும் காதலை
கால்பந்தாய் எண்ணாதீர் ..!!

புனித காதலை
புதைத்து
போலி காதல்
வளர்த்து

அர்த்தமற்ற புன்னகையை
அடுக்கி வைக்காதீர் ....!!


--- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (3-May-14, 11:33 am)
பார்வை : 450

மேலே