என்னை கவிஞனாக்கும்
விடிகாலையில் வீணையில்
மிதந்து வரும் பூபாளம்
விரியும் மலர்களின் இதழ்களில்
தவழ்ந்து வரும் மௌனராகம்
சாளரத்தின் திரைச் சீலை அசைந்து விலகிட
தென்றல் கண்முன்காட்டும் பூந்தோட்டம்
விரிந்திடும் கதிர்கள் சிவந்திட ஆதவன்
உயர்ந்து வரும் சித்திரச் செவ்வானம்
அழகிய காலையின் இனிய அரங்கேற்றம் !
விரல்களின் நாதம் விரியும் மலரின் மௌனம்
சாளரத்தில் தென்றலின் நாடகம்
மௌனத்தில் தலையசைக்கும் மலர்த் தோட்டம்
சிவந்த கதிர்கள் வானத்திரையில் எழுதும் சித்திரம்
என்னை கவிஞனாக்கும் ஒவ்வொரு நாளும் !
----கவின் சாரலன்