அதுவும் இதுவும் - கே-எஸ்-கலை

அது...
வளிக்கூண்டில்
அடைப்பட்ட
காற்று...

இது...
வற்றாமல்
பெருக்கெடுக்கும்
ஊற்று !
===
அது...
விலங்கிட்டு
அடைக்கப் பட்ட
சிறை !

இது...
விலங்குகளை
அடைத்துப் போட்ட
அறை !
===
அது....
கட்டளைக்கு
கட்டுப் பட்ட
வாய்க்கால் !

இது
கரைகளை
தகர்த்தோடும்
காட்டாறு !
===
அது....
திரிகளில்
எரியும்
தீ !

இது..
குமுறும்
எரிமலையின்
லாவா !
===
அது...
பாதையில்
செல்லும்
பவனி...

இது
பாதைகள்
செய்யும்
பயணி...!
===
அது
குமரியின்
அழகிய
சிரிப்பு...!

இது
குழந்தையின்
அட்டகாச
அழுகை...!
===
அது...
யாரோ
தீர்மானிக்கும்
போன்சாய் மரம் !

இது...
தன்னையே
நிர்மாணிக்கும்
காட்டு மரம் !
===
அது...
சுவர்களால்
வரையறுக்கப் பட்ட
வீடு !

இது...
வானத்தையும்
வாழ வைக்கும்
காடு !
===
அது...
மரபுக்
கவிதை !

இது
புதுக்
கவிதை !

எழுதியவர் : கே.எஸ்.கலை (4-May-14, 11:50 am)
பார்வை : 168

மேலே