பாரதி இன்று இருந்திருந்தால்
காணி நிலம்
வேண்டாமடி பராசக்தி
கணினி ஒன்று
போதுமடி எனக்கு
தொட்டால் விரியுதடி
புது மலர்த் தோட்டம்
என் உள்ளத்து உணர்வுகளில்
காவிரியாய் பெருகுதடி கவியோட்டம்
கேளடி செல்லம்மா ! பாரடி இந்த
விந்தை செய்யும் மின் ஒளித திரையினை !
நீ கடையம் சென்றால்
மின் அஞ்சலில்
நான் காதல் கடிதம் எழுதுவேனடி உனக்கு !
வெள்ளையன் வெளியேறிவிட்ட
ஆனந்தத்தில் ஆனந்த சுதந்திரப் பாட்டு
ஆயிரம் பதிந்திடுவேனடி இந்த
எழுத்தெனும் மின் ஏட்டில் பொன் ஏட்டில் !
----கவின் சாரலன்