மாத்தியோசி ஊர் குருவி
'உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாதாம்'
குருவி ஏன் பருந்தாகனும். எந்தக் குருவியும் தன் இனத்தைக் கொன்று உண்னும் பருந்தாக தானேமாற விரும்பி இருக்குமா? எந்த மனிதனாவது எமனாய் வாழ ஆசைப்படுவானா? தன் இனத்தில் தானே உயரப் பறந்த பறவையாகும் நோக்கில் பறந்த பறவையைக் கூட மனிதன் பாராட்டுவதில்லை. மாறக உருவத்தால் சிறிய குருவியை உருவத்தில் பெரிய பருந்தோடு ஒப்பிட்டு மகிழ்கிறான். அப்போதும் பெறிய உருவ பருந்தின் பக்கமே மனித மனம் போகிறது! பிறப்பால் சிறியவரை தாழ்த்திப் பேசுவதும் பனத்தால் உயர்ந்தவரை உயர்த்திப் பேசுவதுமான மட்டமான குனம் மனிதனுக்கே உரியது. எந்த மனிதனுக்கும் அடுத்வரைப் பாராட்டும் குணமில்லை. அதேநேரத்தில் தாழ்திப் பேச தயங்குவதுமில்லை. என்ற உண்மையின் வெளிப்பாடே இந்தப் 'பழமொழி' அல்ல... அல்ல... பழமையான ...மொழி