வெயிலின் கண்ணீர்
விழுந்து உடையும்
மழைத்துளி
விழும் போதே
உடைகிறது.....
----------------------------------
கிளிப் பிள்ளை
போல
அதே சத்தம்
இன்றைய மழையிலும்....
-------------------------------------
தாண்டவமாடும்
புயலின் பாதங்களுக்கிடையில்
தவழ்கிறது
தப்பிப் பிழைத்த மழை....
--------------------------------------
துளிகளின்
உள்ளே மழையும்
வெளியே வெயிலும்,
நேர்கோட்டுப் பார்வைக்கு
சில் காதல்.........
----------------------------------------
முதுகில்
உருண்டோடும்
வியர்வை துளி ஒன்றின்
தொடர்ச்சி,
நனைந்த மழையின்
மாற்றுருவத்
துளி ஒன்று......
--------------------------------------------
கடைசியில்
மேகக் கண்களை
அழுத்தி மழை
வாங்கி விட்டோம்,
விழுந்தது
வெயிலின் கண்ணீர்....
---------------------------------------------
கவிஜி